Tuesday, 30 September 2014


சோழர்களின் மண்ணிலிருந்து ஒரு பாண்டியன் . . .
சோர்விலா வீரபாண்டியன்.
உருவத்தைப் போன்றே . . .
சிந்தனையிலும் உயர்ந்தவன்.

மேனி கருப்பு -
சிந்தனையோ சிவப்பு.
பொதுவுடமைப் பாசறையில்,
பாடம் பயின்றவன்;
பயின்றதைப் பகிர்ந்தளித்து -
பலருக்கும் பயன் தந்தவன்.

அநீதி கண்டால் கொதித்தெழும் கோப அக்னி,
பயமின்றி களம் அமைத்த காளை,
ஆர்ப்பரித்து எழுவதில் ஆழிப் பேரலை,
அரவணைத்துச் செல்வதில் ஆருயிர்த் தோழன்.

அத்தோழனுடன் -
சில காலம் நானும் உடன் நின்றிருக்கிறேன்,
என்ற மகிழ்வோடு வாழ்த்துகிறேன்!

 . . . . . தோழமையுடன் ராதா.

Wednesday, 3 September 2014