Wednesday, 17 May 2017

அகில இந்திய பி எஸ் என் எல் அதிகாரிகள் சங்க முன்னாள் ஆலோசகர் இனி நம்மோடு இருக்கப்போவதில்லை

தோழர்களே!
இதயம் கனத்துப்போனது 
கண்கள் அழுது தீர்த்துக்கொண்டிருக்கிறது. 
ஒரு முப்பதாண்டு தொழிற்சங்க வாழ்க்கை நிழலாய் நிர்மூலமாய் கரைந்து கொண்டிருக்கிறது.




தோழர் வி கே பரமசிவன் அகில இந்திய முன்னாள் ஆலோசகராக   AIBSNLEA சங்கத்தின் செயல்பட்டு கணக்கு அதிகாரியாகப்பணி ஓய்வு பெற்ற தோழர்  VKP என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கபெற்ற மா மனிதன் எனது ஆருயிர் நண்பர் வி கே பரமசிவம் அவர்கள் 16/05/2017 அதிகாலை 0200 மணி அளவில் தொழிலாளர் நலனுக்காக தொழிற்சங்கப்பணிக்காக தத்தம் செய்த சிந்தனையை நிறுத்திக்கொண்டார். 1992 இல் அவர் முதன் முதலாக நோய்வாய்ப்பட்ட நேரம் மதுரை சுமதிமருத்துவமனையில் அவரோடு உடன் இருந்து கவனித்துக்கொண்ட நாட்கள் அலையாய் மனதை வாட்டுகிறது. அறிவொளி இயக்கத்தில் வீதி நாடக நாட்களில் என்னைக்கரைத்துக்கொண்டிருந்த நேரம் வா படிப்போம் நீயும் நானும் சேர்ந்து என்னயும் அவனது களத்தில் சேர்த்துக்கொண்டவர் வி கே பி. 



கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மா நாட்டில் 2010 டிச அவரை அகில இந்திய ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட தகுதியானவர் என வாதாடும் இடத்தில் நான், ராதா கிருஷ்ணன், ராஜமாணிக்கம் போன்றோர் இருந்தோம், அதன் பிரகாரம் அவர் அகில இந்திய ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,

2012 இல் நான் பெல்லாரி மாற்றலில் சென்ற பிறகும் ஒரு தாயின் அரவணைப்பைப்போல அன்பை வெளிப்படுத்தியவர் வி கே பி. ஒரு கடிதம் நிர்வாகத்திடம் இருந்து வரப்பெற்ற நேரம். உடனே எனக்கு மெயில் அனுப்பு என்று சொல்லி அதற்கான பதில் எழுதி அந்த நிர்வாக நடவடிக்கையை முடித்து வைத்தார்.







2015இல் எனக்கு ஒரு பெரிய தண்டனை நிர்வாகத்தால் தரவிருப்பதாகத்தகவல் தெரிந்ததும் அதற்கான போராட்டக்களத்தை உருவாக்கி அதனால் ஒரு பாதிக்கப்படவிருந்த ஒரு தோழனை காத்தவர் வி கே பி.

2017 இல் அந்த தண்டனைக்காலம் முடிவடையும் போது நிச்சயம் அவரிடம் தான் ஆலோசனைக்காக காத்திருந்தேன். அதற்குள் இயற்கையோடு ஒன்றிப்போனார் வி. கே. பி.

என்றென்றும் நிலைத்திருக்கும் வி கே பி என்னும் பெயர் என் நெஞ்சில் மட்டுமல்ல பி எஸ் என் எல் அதிகாரிகள் சங்க ஊழியர்கள் மத்தியிலும்.